×

மேலாண்மை பணிகளுக்காக ரூ.90.61 லட்சத்தில் புதிய வாகனங்கள்

 

மதுரை, டிச.13: மதுரை மாநகராட்சி திரவக்கழிவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக புதிய வாகனங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் திரவக்கழிவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதை உடனடியாக சரி செய்வதற்கு மாநகராட்சியில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள், மணல்களை மட்டும் அகற்றுவதற்கு நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு திரவக்கழிவு மற்றும் திடக்கழிவு பணிகளை மேற்கொள்ள 15 சிஎஃசி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் மினி எஸ்குவேட்டர் வாகனமும், ரூ.35 லட்சத்து 44ஆயிரம் மதிப்பீட்டில் ஜே.சி.பி. இயந்திரமும், மற்றும் ரூ.27 லட்சத்து 58 ஆயிரம் என மூன்று வாகனங்கள் மொத்தம் ரூ.90.61 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனங்களை மேயர், ஆணையாளர் ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மண்டல தலைவர் சுவிதாவிமல், உதவி பொறியாளர் ரிச்சார்டு உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மேலாண்மை பணிகளுக்காக ரூ.90.61 லட்சத்தில் புதிய வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Mayor ,Indrani Ponvasant ,Madurai Corporation ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...